சோனியா காந்தி விரைவில் உடல் நலம் பெற வாழ்த்தி நாடெங்கிலுமிருந்து ஏராளமான காங்கிரசார் வாழ்த்து செய்தி அனுப்பி வருகிறார்கள் . பாஜக மூத்த தலைவர்களும் சோனியாவுடன் போனில்பேசி உடல்நலம் விசாரித்தனர்.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி டூவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துசெய்தி வருமாறு:–

சோனியாஜி உடல்நலம் தேறி வருவதாக தகவல் அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

சோனியாஜி உடல் நலகுறைவு ஏற்பட்டு பாராளுமன்றத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவசர கால அடிப்படை மருத்துவ வசதிகள்கூட இல்லாமல் இருந்தது வேதனை தந்தது . அந்தசமயத்தில் அவரை அழைத்துசெல்ல சக்கரநாற்காலி பயன் படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவரது உடல் நிலையை கருத்தில்கொண்டு, அவரை எல்லா நவீனவசதிகளும் கொண்ட ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கவேண்டும் என்று டூவிட்டரில் நரேந்திரமோடி எழுதியுள்ளார்.

Leave a Reply