குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தில்சேதமடைந்த மசூதிகளின் சீரமைப்புச்செலவை அரசே ஏற்கத்தயார் என்று முதல்வர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் மசூதிகள் சேதமடைந்தன . சேதமடைந்த மசூதிகளை அரசுசெலவில் பழுதுபார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, குஜராத்மாநில அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட்ஜெனரல் துஷார் மேத்தா, ‘மாநில அரசின்சார்பில் மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் அளிப்பதுதொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி அந்ததிட்டம் என்ன? என்பதை நீதிமன்றத்துக்கும் குஜராத் இஸ்லாமிய நிவாரணகமிட்டிக்கும் மாநில அரசு தெரிவிக்கும்’ என்று கூறினார்.

Leave a Reply