ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த முடியாவிட்டால்பதவி விலகலாம் ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த முடியா விட்டால், பிரதமர் மன்மோகன்சிங்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலகவேண்டும் என பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின்மதிப்பு புதன் கிழமை ரூ. 68.80 ஆகச்சரிந்ததை தொடர்ந்து இக்கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: “நிதி நிலைமையை சீராக்குவதற்கான வழிகளும், யோசனைகளும் தெரியாமல் மன்மோகன்சிங்கும், சிதம்பரமும் தவிக்கின்றனர். இந்நிலைக்கு பிரதமரும், அவரது அமைச்சர்களுமே காரணம். இறக்குமதி, ஏற்றுமதி கொள்கைகளை சரியானமுறையில் வகுத்திருந்தால் இந்தநிலை ஏற்பட்டிருக்காது. இவர்களின் அலட்சியத்தால் லட்சக் கணக்கானோர் வேலை இழக்கும் நிலையும், தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தைசந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆளுகைத் திறன் இல்லாவிட்டால் அதை ஒப்புக்கொண்டு பதவியில் இருந்து மன்மோகனும், சிதம்பரமும் விலகவேண்டும்’ என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

Leave a Reply