வாக்குவங்கி அரசியலுக்காக பீகார் மாநில அரசு யாசின்பட்கலிடம் விசாரணை நடத்த தயங்குவது ஏன் பா.ஜ.க, தேசிய துணை தலைவர் சிபி. தாகூர் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இந்தியன் முஜாகீதின் அமைப்பைசேர்ந்த யாசின் பட்கலை இந்திய -நேபாள எல்லையில் தேசியபுலனாய்வு பிரிவு மற்றும் மாநில போலீசார் இணைந்து கடந்த புதன் கிழமையன்று கைது செய்யப்பட்டான். ‌தொடர்‌ந்து அவனை 12 நாள்காவலில் வைத்து விசாரிக்க தலை நகர் புதுடில்லிக்கு அழைத்துசெல்லப்பட உள்ளான். ஆனால் மாநில அரசோ வாக்குவங்கி அரசியலை கணக்கி்ல் கொண்டு யாசின் பட்கலிடம் விசாரணை மேற்‌கொள்ள தயக்கம்காட்‌டி வருகிறது.

கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் புத்த கயாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்ககூடும் என சந்தேகிக்கும் நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிடாதது ஆ‌ச்சரியமாக உள்ளது என்று தாகூர் கேள்வி எழுப்பினார்.

Tags:

Leave a Reply