பிரதமர் மன்மோகன்சிங், தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் பிரதமர் மன்மோகன்சிங், தோல்வியடைந்த பொருளாதார நிபுணர் என பாஜக மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியது:

ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்துவருவதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பு. அவர் தோல்வி அடைந்த பொருளாதாரநிபுணர் ஆவார்.

பொருளாதாரத்தை பொறுத்த வரை, பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோர் தோல்வியடைந்து விட்டனர். எனது கண்ணோட்டத்தில் அவர்கள் பொருளாதார நிபுணர்களே இல்லை. அல்லது பயனற்ற, மோசமான பொருளதாரநிபுணர்கள் என்று கூறலாம்.

நாட்டை ஆளும் உரிமையை ஐ.மு., கூட்டணி இழந்துவிட்டது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம், உணவுப்பாதுகாப்பு மசோதா போன்றவை நாட்டின் நிதிநிலை மோசமடைவதற்கு வழிவகுக்கும். இவற்றால் பண வீக்கம் உயரும் என்றார் முரளிமனோகர் ஜோஷி.

Leave a Reply