பெட்ரோல் பங்க்குகளை ஏன் மூடவேண்டும் பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல், டீசல் விற்பனைசெய்யும் நேரத்தை குறைக்கும் வகையில், இரவு, 8:00 மணியில் இருந்து காலை, 8:00 மணிவரை மூட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் . இதன் மூலம், 16 ஆயிரம்கோடி ரூபாய் அன்னிய செலாவணியை கட்டுப்படுத்த முடியும்

என்று மத்திய அரசுக்கு, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், வீரப்பமொய்லி பரிந்துரை செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக., செய்திதொடர்பாளர் ஷாநவாஸ் ஹூசைன் நிருபர்களிடம் கூறியதாவது , பெட்ரோல் பங்க்குகளை ஏன் மூடவேண்டும். அதற்குபதில் மத்திய அரசு நாட்டையே மூடிவிடலாம். கார்கள் மற்றும் இரண்டுசக்கர வாகனங்களுக்கு, காலையிலேயே பெட்ரோல் போடத் தவறியவர்கள், இரவில் என்னசெய்வர். இது விபரீதமானமுடிவு என்றார்.

Leave a Reply