உணவு பாதுகாப்புமசோதா மத்திய அரசின் தேர்தல் தந்திரம் உணவு பாதுகாப்புமசோதா மத்திய அரசின் தேர்தல் தந்திரம் என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் . மாநிலங்களவையில் இந்தமசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி தலைவர் அருண்ஜெட்லி, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க ஒருமாதத்திற்கும் குறைவான

நாட்களே உள்ள நிலையில் அவசர சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் அரசு தனது உரிமையை தவறாக பயன் படுத்தி இருப்பதாக கூறினார்.

தற்போது அமலில் உள்ள பொதுவிநியோக திட்டத்திற்கும், உணவுமசோதா கீழ் வழங்கப்பட உள்ள மானியத்திற்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை என்று சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, நாட்டின் நலன்கருதி மசோதாவை பா.ஜ.க ஆதரிப்பதாக கூறினார்.

உணவுபாதுகாப்பு மசோதா மத்திய அரசின் தேர்தல் தந்திரம் எனக்கூறிய வெங்கய்யா நாயுடு, மசோதாவால் மக்களுக்கு எந்தபயனும் இல்லை என்று கூறினார். நாட்டின் ஏழ்மை குறைந்து விட்டதாக திட்டக் குழு தெரிவித்திருக்கும் போது மசோதாவை கொண்டுவருவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply