பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமிமஞ்சு. தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்துவருவதோடு படங்களை தயாரித்தும் வருகிறார். தமிழில் கடல் படத்தில் அறிமுகமானார், மறந்தேன் மன்னித்தேன்_ படத்தில் நடித்தார். தற்போது தலைவன்வருகிறான் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து அதில் நடித்தும் வருகிறார்.
லட்சுமி மஞ்சு அமெரிக்காவில் படித்துவளர்ந்தவர். அவருக்கு தற்போது பாஜக.,வில் இனைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. அவரது தந்தை மோகன் பாபுவும் எம்.பி., இருந்தவர். இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத்துக்கு வந்திருந்த நரேந்திரமோடியை லட்சுமிமஞ்சு சந்தித்தார். விரைவில் அவர் பாஜக.,வில் சேருவார் என தெரிகிறது. அப்படி சேரும்பட்சத்தில் அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன .