காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு இந்தியாவின் கஜானாவை காலி செய்துவிட்டது . மேலும் நாட்டை மிகமோசமான நிலைக்கு தள்ளி கல்லறைகட்டி வருகிறார்கள் என்று நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து பொடாட் என்னுமிடத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் மோடி கூறியதாவது:-

திறமையற்ற ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதிகாரத்திலிருந்து நாட்டை காப்பற்றவேண்டிய கட்டாயமான நேரம் இது. இந்தியாவின் கஜானாவை அவர்கள் காலி செய்து விட்டனர். மேலும் நாட்டை மிகமோசமான நிலைக்கு தள்ளி கல்லறை கட்டி வருகிறார்கள்.

நாட்டுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைமையிலான அரசு இழந்து விட்டது. பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவது, எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது
என்று அவர் கூறினார்.

Leave a Reply