மோடி, பிரதமர் வேட்பாளராக தக்கநேரத்தில் அறிவிக்கப்படுவார் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக, மோடியை அறிவிப்பதுதொடர்பாக, கட்சிக்குள் எந்த வித கருத்துவேறுபாடும் இல்லை. மோடியை, பிரதமர் வேட்பாளராக்குவது தொடர்பான அறிவிப்பு, தக்கநேரத்தில் வெளியாகும்,” என்று பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், மாநில பாஜக., செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக., தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார். அப்போது, “குஜராத் முதல்வர், நரேந்திரமோடியை, கட்சியின் பிரதமர் வேட்பாளராக உடனே அறிவிக்கவேண்டும்’ என, பலரும் குரல்கொடுத்தனர்.

இதையடுத்து, ராஜ்நாத்சிங் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியைபோல, பா.ஜ.க.,வில், எந்தப்பிளவும் இல்லை. பிரதமர்வேட்பாளர் யார் என்பதில், யாருக்கும் கருத்துவேறுபாடு கிடையாது. மோடியை, பிரதமர்வேட்பாளராக அறிவிப்பது குறித்து, தகுந்தநேரத்தில் அறிவிப்பு வெளியாகும். மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொருளாதார கொள்கையில் மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது. உலகில் எந்த ஒருஅரசும், நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு, எதிர்க் கட்சியை காரணம் காட்டியது கிடையாது. என்று ராஜ்நாத்சிங் பேசினார்.

Leave a Reply