தரம் தாழ்ந்த அரசியல் நடவடிக்கைகளை காங்கிரஸ் கைவிட வேண்டும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிரான காங்கிரஸின் அண்மைக் கால தரம் தாழ்ந்த அரசியல் நடவடிக்கைகளை காங்கிரஸ் கைவிட வேண்டும் என பாஜக முன்னால் தேசிய தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

புது தில்லியில் நடைபெற்ற பா.ஜ.க தொழில்பிரிவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் நிதின்கட்கரி பேசியதாவது:

என்கவுன்டரில் கொல்லப்பட்ட துளசி பிரஜா பதியின் தாய் நர்மதா பாய் பிரஜா பதியிடம் வெற்று வக்காலத்து பத்திரத்தில் கைநாட்டு பெற பா.ஜ.க எம்.பி.,க்கள் பிரகாஷ் ஜவடேகர், பூபேந்திர சிங் யாதவ் ஆகியோர் முயற்சித்தாக குற்றம்சாட்டப்பட்டது.

புலனாய்வு செய்தியாளரான புஷ்ப்சர்மா ரகசியகேமரா மூலம் பதிவுசெய்த காட்சியில், ஜவடேகர், பூபேந்திர சிங் ஆகியோர் நர்மதா பிரஜா பதியிடம், அமீத்ஷா, நரேந்திரமோடி தூண்டுதலின் பேரில் கைநாட்டுபெறுவது போன்று காட்டப்பட்டிருந்தது.

நரேந்தி ரமோடிக்கு நெருக்கமானவரான பா.ஜ.க பொதுச்செயலர் அமித் ஷாவுக்கு உதவுவதற்கு இதில் ஈடுபட்டதாக புலனாய்வுசெய்தியாளரான புஷ்ப்சர்மா தெரிவித்திருந்தார்.

இதன்பின்னணியில் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸின் இந்த மாதிரியான செயல்கள் அதன் தரம்தாழ்ந்த அரசியலையே காட்டுகிறது.

இதை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ளவேண்டும். தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியல் தரம்தாழ்ந்து செல்கிறது. இதை மக்களும், ஊடகங்களும் நம்பமாட்டார்கள் என்றார்.

நாட்டில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலையை முடிவுக்குகொண்டுவர குடியரசு தலைவர் தலையிடவேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம், முடிவுகளை உச்சநீதிமன்றத்தின் துணையுடன் மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரநிலை வருந்தத்தக்க நிலையில் உள்ளது. ஆசியாவில் பெரும்பரப்பில் நிலக்கரி வயல்களை வைத்துக் கொண்டு, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதிசெய்ததால் மின் உற்பத்தி துறை திவாலாகும் நிலையில் உள்ளது.

தொழில்துறை சட்டச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.

இந்தசூழ்நிலையில் இருந்து நாடுமீள ஒரு உறுதியான பொருளாதார கொள்கையை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக நீதித்துறையை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினரை குடியரசுத் தலைவர் அழைத்து விவாதிக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான அரசின் தவறானபொருளாதார கொள்கை, ஊழல், திறனில்லாத தலைமை போன்றவைகளால் நாடு தற்போது இந்தநெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் கொள்கைகளால் விமானத்துறை, சுரங்கம், மின்சாரம், தொலைத்தொடர்பு என அனைத்து துறைகளும் நலிவடைந்துள்ளன என்றார்.

Leave a Reply