செப்.26-ந் தேதி இளம் தாமரை மாநாடு தொடர்பாக நிர்வாகி களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநாடுநடைபெறும் மைதானத்தை நேரில்பார்வையிட்டார்.

தமிழக பாஜக இளைஞர் அணிசார்பில் ”இளம் தாமரைமாநாடு” வருகிற 26-ந்தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரெயில்வேமைதானத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங்கும், குஜராத் மாநில முதல் மந்திரியும், தேர்தல் பிரசாரகுழு தலைவருமான நரேந்திரமோடி ஆகியோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் இணையதளம் மூலம் முன் பதிவு செய்யும் வசதி நேற்று முன்தினம் தொடங்கியது. இதேபோல மாநாட்டிற்கான முத்திரையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் மாநாடுதொடர்பான பணிகளை மேற்கொள்ளுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லை நகரில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாநாட்டிற்குரிய பணிகளை எடுத்துக் கூறினார்.

இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் என்னபணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கி அதனை சிறப்பாக செய்துமுடிக்க அவர் அறிவுறுத்தினார்.

அதன் பிறகு மாநாடு நடைபெற உள்ள இடத்தை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். அப்போது மாநாட்டிற்கான மேடை வரை படத்தை அவர் வெளியிட்டார். மாநாடுமேடை டெல்லி செங்கோட்டையை போன்ற மாதிரி தோற்றத்தில் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply