பத்திரிகைக் கட்டுரைகள், தொலைக்காட்சி விவாதங்கள், அரசியல் வாதிகளின் அறிக்கைகள் எல்லாமே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை மதத் தீவிரவாதியாகவும் கொலைகாரர்ராகவும் உருவகபடுத்துகின்றன. குஜராத் முஸ்லிம் மக்களில் பலர் காங்கிரஸ் வேட்பாளர்களை நிராகரித்து விட்டு, மோடியின் ஆதரவாளர்களைத் தேர்தலில் வெற்றி பெற செய்தும் கூட பொய்யான செக்யுலரிச வாதம் தொடர்கிறது.

 

 

இந்த நேரத்தில் நடிகர் சல்மான் கானின் தந்தையும் பிரபல திரைப்பட கதாசியருமான சலீம் கான் அளித்துள்ள ஒரு பேட்டி கவனத்துக்குரியதாகிறது. அவர் சில முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களை நினைவு படுத்திக் கேட்கிறார்.

1. குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான மும்பை கலவரம் நடந்தபோது, மகாராஷ்டிர முதல்வர் யார் என்பது யாருக்காவது நினைவு இருக்கிறதா ?

2. உத்தர் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் மல்லியான, மீரட், பாகல்பூர், ஜாம்சட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது, யார் முதலமைச்சராக இருந்தார் என்பது யாருக்காவது நினைவு இருக்கிறதா ?

3. குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு முன்பு பெரிய கலவரங்கள் நடந்தனவோ அப்போது முதலமைச்சராக இருந்தவர்கள் யார் யார் என்பது இப்போது சொல்லபடுகிறதா ?

4. டெல்லியில் 1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் படுகொலைகளின் போது டெல்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக யார் இருந்தவர் யார் என்பது தெரியுமா ?

5. நரேந்திர மோடியை பேய், பிசாசை போல் வர்ணிபவர்கள் ஏன் மேற்சொன்ன காங்கிரஸ் ஆட்சிகால நிகழ்வுகளைப் பேசுவதில்லை? நரேந்திர மோடியின் சாதனைகளை பற்றி ஏன் பேசுவதில்லை.

ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின்சார திட்டம் குஜராத்தில் இருக்கிறது. மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் தடையின்றி 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. குஜராத்தின் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை என்று உலக வங்கி சொல்லி இருக்கிறது. உலகில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் அகமதாபாத் மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

குஜராதில் தான் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைவு என்று மத்திய அரசின் தொழில் துறை சொல்லி இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் எந்த சிறு கலவரமும் நிகழவில். இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் நரேந்திர மோடி என்று கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குஜராத்திலும் பிற மாநிலங்களிலும் நடைபெற்ற மதக்கலவரங்ககள் பற்றிய புள்ளி விவரங்களை கொஞ்சம் புரட்டி பார்ப்போமா ?

1947-வங்காளத்தில் நடைபெற்ற கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,000.
1964- ரூர்கோல கலவரத்தில் 2,000. 1987-ராஞ்சி 200, 1969- அகமதாபாத் 512.

1970, 1985- பிவந்தி 226, 1980- மொராபாத் 2,000. 1983 – அஸ்ஸாம் 5,000.

1984-டெல்லி 2,738, 1985-குஜராத் 300, 1986-அகமதாபாத் 59. 1982- ,மீரட் 81. 1992-அலிகர் 176. 1992-சூரத் 175.

இது தவிர கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் 1979-இல் ஜாம்ஷெட்பூரில் 125 பேர் உயிரலந்துள்ளர்கள்.

காங்கிரஸ் கட்சி, தனது ஆட்சி காலத்தில் நடைபெற்ற கலவரங்களை மறந்து விட்டு, தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதர்காக குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறது. குஜராத்தில் மோடியின் சாதனையை ஒதுக்கி தள்ளும் காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும் பொய்களை மட்டுமே பரப்பி வருகின்றன.

இவர்களை மீறி மோடி வெற்றி பெருவது அரசியல் வாதிகளை மீறி "மக்கள்" வெற்றி பெறுவதாகும்.

Leave a Reply