பெங்களூரு மாநகராட்சி மேயராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த பசவனகுடி வார்டுஉறுப்பினர் பி.எஸ்.சத்தியநாராயணா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெங்களூரு மாநகராட்சிக்கு மேயர், துணைமேயர் பதவிக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. மேயர்பதவி பொதுபிரிவுக்கும், துணை மேயர் பதவி பழங்குடியின மகளிருக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில், பெங்களூரு பசவனகுடி வார்டு பா.ஜ.க உறுப்பினர் பிஎஸ்.சத்தியநாராயணா போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேயராகப் பதவி ஏற்ற சத்திய நாராயணா, செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி:

பெங்களூரு மாநகராட்சி மேயராக என்னைத்தேர்ந்தெடுக்க காரணமான பா.ஜ.க பொதுச்செயலாளர் அனந்த் குமார், முன்னாள் துணைமுதல்வர் ஆர்.அசோக், பா.ஜ.க.,வைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கு நன்றி.

பெங்களூரு மாநகராட்சியில் பாஜகவைச் சேர்ந்தமேயர்கள் பலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளனர்.

என்றாலும், பலதிட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதனை படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்கள் நெரிசலில்லாமல் செல்லும்வகையில், சாலைகள் மேம்படுத்தப்படும். ஏரிகள் தூர்வாரப்படும். குடிநீர், மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி, விளம்பரங்கள் மூலம் மாநகராட்சியின் வருவாய்பெருக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் பல்வேறு வளர்ச்சிதிட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

Leave a Reply