நீதித்துறை நியமனங்கள் ஆணையமசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பை பா.ஜ.க புறக்கணித்து வெளிநடப்புசெய்தது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான,நீதித்துறை நியமனங்கள் மசோதா மீது மாநிலங்களவையில் நேற்று வாக்கெடுப்பு நடந்தது

மசோதாவுக்கு ஆதரவாக 131வாக்குகளும், எதிராக ஒருவாக்கும் கிடைத்தன. இதன்மூலம் இந்தமசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. முன்னதாக, இந்தவாக்கெடுப்பை பா.ஜ.க புறக்கணித்து வெளிநடப்புசெய்தது.

நீதிபதிகள் நியமனத்தை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான குழு மேற்கொண்டு வந்தது. இந்தமுறையை மாற்றிவிட்டு, நீதித்துறைக்கான நியமனங்கள் ஆணையத்தை ஏற்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது. இதற்கு சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வதற்கான மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தமசோதா வாக்கெடுப்புக்கு விடும்முன்பு, நீதித்துறையின் செயல்பாடுகளை, மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல், எதிர்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி உள்ளிட்ட உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர். தற்போது நடைமுறையில் இருக்கும் நீதிபதிகள் தேர்வுமுறையில், வெளிப்படை தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறைபாடுகள் உள்ளன என அவர்கள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply