விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாஜக மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மூலப் பொருளாம் முழுமுதற் கடவுளாகிய விநாயகப்பெருமானின் சதுர்த்தி நன்னாளில் அனைவருக்கும் பாஜக.,வின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உலகின் எப்பகுதியில் எவர் எதைதுவக்கினாலும் அத்துவக்கத்தின் உருவாக விநாயகப்பெருமான் முன்வந்து நிற்கின்றார்.ஒருநல்ல துவக்கமே நல்ல முடிவாகவும், நிறைவாகவும் அமையும் என்பதால் விநாயகரின் துணைகொண்டு துவக்கப்படும் எந்த செயலும் வெற்றிகரமாக நிறைவுபெறும் என்பது நம்நாட்டு மக்கள் பன்னெடுங் காலமாக அனுபவத்தில் கண்டுவருகிறார்கள். அத்தகு விநாயகப்பெருமானின் சதுர்த்தி விழாவீட்டு விழாவாக இருந்ததை பொதுவிழாவாக மாற்றி சுதந்திர போராட்டத்தில் நாட்டு மக்களுக்கு உணர்ச்சி கொடுப்பதற்காக மாற்றியபெருமை பாலகங்காதர திலகரையேச் சாரும்

இன்று உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திவிழா பொதுவிழாவாக கொண்டாடப்படுகிற தென்றால் அவ்விழா தேசபக்தியும்,தெய்வபக்தியும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு விழாவாக அமைந்துள்ளது. எனவே இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை நம் நாட்டின் வருங்கால நல்லாட்சி அமைப்பதற்கான பிள்ளையார்சுழி இட்டு வணங்கி நாடும், வீடும் காக்கப்பட மக்கள் உறுதிபூண்டு உழைக்கவேண்டும். இந்த விநாயகர் சதுர்த்திவிழா அனைத்து மக்களுக்கும் நலம்சேர்ப்பதாகவும், வளம்சேர்ப்பதாகவும்,கடந்த கால துன்பங்களை நீக்கி இன்பம் குவிப்பதாகவும் அமைய பிரார்த்தித்து பாஜக.,வின் சார்பில் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply