இந்திய விண்வெளி ஆராய்ச்சி_ அமைப்பான இஸ்ரோவின் செயல்பாடுகளில் நடைபெற்ற முறைகேடுகளை தலைமை கணக்குதணிக்கையர் (சி.ஏ.ஜி) அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் , நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுஊழல், ஹெலிகாப்டர்கள் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களை அம்பலப் படுத்தி காங்கிரஷின் ஊழல்களை மக்கள் மத்தியில் அம்பலபடுத்திய சிஏஜி. தற்போது இந்தியவிண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகங்கள், துறைகளின் செயல் பாடுகளை சிஏஜி. அமைப்பு தணிக்கைசெய்துள்ளது. அதில் இந்தியாவுக்கு உரிய விண்வெளி சுற்றுப் பாதையில் பன்னாட்டு தனியார்நிறுவன செயற்கை கோளை நிலை நிறுத்த அனுமதிவழங்கியது உள்ளிட்ட முறைகேடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கபட்டிருப்பதாவது , இன்டெல்சாட் என்னும் சர்வதேச தனியார்செயற்கைக்கோள் நிறுவனத்தின் செயற்கைக் கோளை இந்திய நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் வருகிற 55இ என்ற சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் வருகிற சுற்றுவட்டப்பாதையில் இந்திய செயற்கைக் கோள்களை மட்டுமே நிலைநிறுத்துவது வழக்கம். இந்திய சுற்றுப் பாதையை வெளிநாட்டு செயற்கைக் கோள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்திருப்பது, நாட்டின் செயற்கைக்கோள் தொலை தொடர்பு கொள்கையை மீறியசெயலாகும்.

அதுமட்டுமல்ல சர்வதேச தொலை தொடர்பு யூனியனின் ரேடியோ ஒழுங்கு முறைகளையும் மீறியசெயல். அன்னிய நிறுவனம் வரம்புமீறி பலன் அடைய செய்யப்பட்டுள்ளது.மேலும் 2003 பிப்ரவரி முதல் 2004 பிப்ரவரி வரையிலான ஓராண்டுகாலத்திற்கு இன்டெல்சாட்டிடம் 16 டிரான்ஸ்பாண்டர்கள் (தொலை தொடர்பு சாதனம்) குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டிலிருந்து செயல்பாட்டை நிறுத்திவிட்ட இன்சாட் 2 டிடீ செயற்கைக்கோளின் சேவைகளை தொடர்வதற்காக இடைக்கால ஏற்பாடாக இதுசெய்யப்பட்டுள்ளது. அப்போதிருந்து இன்சாட் 2 டிடீயின் சுற்றுவட்டப் பாதை அந்த அன்னிய செயற்கைக் கோளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்சாட் டிடீக்கு பதிலான செயற்கைக்கோள் செப்டம்பர் 2003ல் விண்ணில் செலுத்தியபின்னரும் இன்டெல்சாட்டின் ஐஎஸ் 702 செயற்கைக்கோள் அதே சுற்றுப்பாதையில் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றிவருகிற செயற்கைக்கோளுக்கு பேக்அப் வழங்குவது ‘இஸ்ரோ’வில் நடைமுறையில் இல்லை என்றபோதிலும், இதுவும் மீறப்பட்டுள்ளது.

நாட்டின் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்கும் தொலைதூரக்கல்வி வழங்குவதற்கு உதவும் முதல் செயற்கைக் கோள் பேண்ட்வித் ஒதுக்கீடுகளிலும் முரண்பாடுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply