கேரள முதல்வர், உம்மன் சாண்டிக்கு கறுப்புகொடி காட்டிய இளைஞரை, போலீசார் மிகமோசமாக அடித்து, உதைத்த காட்சிகள், கேரள காங்கிரஸின் அடாவடி அரசியலை அம்பலபடுத்தியுள்ளது .

சூரிய மின்சக்தி பேனல் முறைகேட்டில், காங்கிரஸ், முதல்வர், உம்மன்சாண்டிக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. முதல்வர் பதவி விலகவலியுறுத்தி, சட்ட சபையை முற்றுகையிடும் போராட்டம், இரண்டு நாட்கள் நடந்தன. இரண்டு நாட்களுக்குமுன், தன்வீட்டிலிருந்து, முதல்வர் சாண்டி, அலுவலகத்திற்கு செல்லும்போது, கம்யூனிஸ்ட் தொண்டர் ஒருவர், திடீரென கறுப்புக்கொடி காட்டினார்.

இதை கண்ட கேரள காவல்துறை இளைஞரை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கினர். நான்கைந்து போலீசார், அந்த இளைஞனை பிடித்துக்கொள்ள, எஸ்ஐ., ஒருவர், அந்த இளைஞனின் இடுப்புக்குகீழே, பலமுறை உதைத்து மயக்கமடைய செய்தார். இதை மறைந்திருந்து படம் எடுத்தயாரோ, “டிவி’க்கு கொடுத்துவிட்டனர். அந்தக்காட்சிகள் நேற்று முன்தினம், “டிவி’யில் வெளியானது. இதனை தொடர்ந்து மக்கள் கொதித்து போயுள்ளனர்.

Leave a Reply