காங்கிரஸால் தங்கத்தை மணலாகதான் மாற்ற முடியும் மத்திய அரசிடம் யாசகம்கேட்டு நிற்பதே பெரும்பாலான மாநில முதல்வர்களின் பழக்கமாக இருக்கிறது . ஆனால், ராமன் சிங் அப்படியல்ல. அவர் தனக்கேயுரிய தனித்துவத்துடன் திகழ்கிறார் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கரில் பேரணி ஒன்றைத் துவக்கிவைத்து அவர் உரையாற்றிய போது அவர் பேசியதாவது . நான் முதல்வர் ராமன்சிங்கை வணங்குகிறேன். தெலங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் அரசு நடந்துகொண்ட விதத்தை கவனியுங்கள். ரத்தக்களறியே நடக்கிறது. ஆனால், சட்டீஸ்கரைப்பற்றி யோசிக்கிறேன். வாஜ்பாயியின் முடிவெடுக்கும் திறனைத்தான் இது எனக்கு நினைவுபடுத்துகிறது. சட்டீஸ்கர் தோற்றுவிக்கப்பட்டபோது, மத்தியப் பிரதேசத்தில் இனிப்புகள் பறிமாறப்பட்டன. ஆனால், தெலங்கானா பற்றி பேசும்போது, ஊரடங்கு உத்தரவுதான் போடப்படுகிறது . இதுதான் காங்கிரஸின் செயல்திறன்! வேலைசெய்யும் முறை!

ராமன்சிங், சட்டீஸ்கரின் வளர்ச்சிக்காக என்றுமே புது தில்லியை சார்ந்து நின்றதில்லை. காங்கிரஸால் தங்கத்தை மணலாகதான் மாற்ற முடியும் என்றார்

Leave a Reply