பாஜக ஒரு மதவாதக்கட்சி என கூறி வாக்காளர்களை காங்கிரஸ் குழப்ப முயற்சிக்கிறது என பா.ஜ.க முன்னாள் தலைவர் நிதின்கட்கரி குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க ஒரு மதவாதக்கட்சி மற்றும் சிறுபான்னையினருக்கு எதிரானக்கட்சி என தவறான பிரசாரத்தைக் காங்கிரஸ் பரப்புகிறது. தனிப்பட்ட சாதி மற்றும் மதத்தினரை திருப்திப் படுத்தும் அரசாக காங்கிரஸ் செயல்படுகிறது.இதில் பா.ஜ.க.,விற்கு நம்பிக்கையில்லை. பா.ஜ.க.,வின் நிலைப்பாடு அனைவருக்கும் சமூகபொருளாதார நீதி கிடைப்பதுதான். காங்கிரஸ் வாக்காளர்களை சமானதானப்படுத்த முடியாததால் அவர்களை குழப்ப முயற்சிசெய்கிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சியால் வெற்றிப்பெற முடியாததால், பாஜக மதவாதக்கட்சி என்ற முத்திரையைக் குத்த முயற்சிக்கிறது. குஜராத்தில் பிரஜாபதி,சொராபுதீன் ஆகிய தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லபட்டது போலியானவை என்றும் கூறவும்முயலுகிறது. தனிப்பட்ட ஒருபிரிவினருக்காக செயல்படும் காங்கிரஸ் மனோபாவம் வருத்தம் தருகிறது . வளர்ச்சிப்பாதையில் தொழில்நுட்பத் துறை இருந்தது. ஆனால் தற்போது ஆளும் அரசின் செயல் பாட்டால் ரூபாய்மதிப்பு வீழ்ச்சியடைந்து,அந்நியநேரடி முதலீட்டில் ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

Leave a Reply