நாடாளுமன்றத்தில் தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு பேசிய பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்குத் திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும், மத்திய பல்கலைக் கழகங்களில் தமிழக்கு இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும் உள்பட தமிழின் சிறப்புகளைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் தருண் விஜய் பேசினார்.உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினரான தருண் விஜய் பேசியது, தமிழக தலைவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளைத் தொலைக்காட்சி வாயிலாக கருணாநிதி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழின் சிறப்புகள் தொடர்பாக தருண் விஜய் பேசியதையும் கருணாநிதி பார்த்துள்ளார்.உடனே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு கருணாநிதி பேசியுள்ளார்.வட இந்தியர் ஒருவர் செம்மொழி தகுதி பெற்ற தமிழின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசியதால் தான் (கருணாநிதி) மகிழ்ந்து போனதாகவும், தனது பாராட்டுகளை அவருக்குத் தெரிவிக்கும்படியும் கே.பி.ராமலிங்கத்திடம் கூறியுள்ளார்.

தருண் விஜயைச் சந்தித்து கே.பி.ராமலிங்கமும் கருணாநிதியின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தருணும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply