திருச்சியில் பா.ஜ.க சார்பில், இளம்தாமரை மாநாடு வரும், 26ம் தேதி நடைபெறுகிறது . மாநாட்டில் குஜராத்முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்று பேசுகிறார். இதற்காக இணையதளம் மூலம் மாநாட்டில்பங்கேற்க விருப்பம் உள்ளோர், முன்பதிவு செய்துவருகின்றனர்.

பொன்மலை ஜிகார்னர் மைதானத்தில் நடக்கும் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை, தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்.

மாநாடு மேடை அமையும்இடம், மைதானத்தை பார்வையிட, மூத்த தலைவர் வெங்கையாநாயுடு நாளை திருச்சிவருகிறார். மேலும் திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட் ரவி மினி ஹாலில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து , அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்

Leave a Reply