பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இந்தியன்முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் யாசின்பட்கல், கடந்த இருவாரங்களுக்கு முன்பு இந்திய-நேபாள் எல்லையில் கைதுசெய்‌யப்பட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பு விசாரித்துவருகிறது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மும்பை , ஜவேரிபஜார் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இவனுக்கு

தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வீடியோகாட்சி ஒன்று இன்று வெளியாகியுள்ளது.

இதில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலைமாதம் மும்பையின் ‌ஜவேரிபஜார், ஒபரே ஹவுஸ் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 27 பேர் பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின்போது, யாசின்பட்கலின் நெருங்கிய கூட்டாளி வக்காஸ் என்பவனின் உருவம் சம்பவம் நடந்தபகுதியில் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் வக்காஸ் ஒருபையுடன் கூட்டத்தில் நடமாடியதும், தெரியவந்துள்ளது. எனவே வக்காஸ் தான் குண்டுவைத்து விட்டு சென்றான் என்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply