வரும் பாராளுமன்றதேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று, நரேந்திரமோடி பிரதமர் ஆவது உறுதி என பாஜக மூத்த தலைவர்ககளில் ஒருவரான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இல.கணேசன் கூறியதாவது:

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் விசாரணை நடத்த நியமிக்கபட்ட அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை. கொலைவழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்.

வருகின்ற பாராளுமன்றதேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. பாஜக அமோகவெற்றி பெற்று நரேந்திரமோடி பிரதமர் ஆவது உறுதி. தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பாசமுள்ள கட்சிகளுடன் பேச்சுவார்தை நடத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply