பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா போன்ற பொருளாதார வல்லுனர்களால்தான், இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது,” என்று பா.ஜ.க., தேசிய துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் திருச்சியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஐந்து லட்சம்பேர் வெவ்வேறு துறைகளில் வேலையிழந்துள்ளனர். காங்கிரஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளை தேடும் நிலையில், நம்நாட்டு தொழிலதிபர்கள், வெளிநாட்டில் முதலீடுசெய்து வருகின்றனர்.

பொருளாதாரவளர்ச்சி, விவசாயம், உற்பத்தி என்று காங்கிரஸ் ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. டாலர்மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருகிறது. அவசர சிகிச்சைபிரிவில் உள்ளது போல், அரசு செயல்படுகிறது.

காங்கிரஸ் அரசின் அனைத்து திட்டங்களும், ஓட்டுவங்கியை குறிவைத்தே உள்ளதேதவிர, மக்கள் நலனுக்காக இல்லை. மத்திய அரசின் உணவுமசோதாவால், தமிழக அரசுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு திட்டத்தினாலும், மாநில அரசுகள் பாதிக்கப்படுகிறது. இந்த அரசு மக்களின் நம்பக தன்மையை இழந்து விட்டது.

பிரதமர் மன்மோகன், நிதியமைச்சர் சிதம்பரம், திட்டக் குழு துணைத் தலைவர் அலுவாலியா உள்ளிட்ட பொருளாதார வல்லுனர்களால்தான், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. ஆனால், இதை ஏற்கமறுக்கும் நிதியமைச்சர் சிதம்பரம், முன்பு நிதியமைச்சராகவும், தற்போது குடியரசு தலைவராகவும் உள்ள பிரணாப்முகர்ஜி மீது பழிபோடுகிறார்.

நாட்டின் அனைத்துதரப்பு மக்களின் நம்பிக்கை இழந்துவிட்ட காங்கிரஸ் அரசை வீழ்த்த மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நேரம் பார்த்துக்கொண்டுள்ளனர். ஆகையால், வரும் லோக்சபாதேர்தலில், 272க்கும் அதிகமான இடங்களை பிடித்து. பா.ஜ.க, கண்டிப்பாக ஆட்சியைபிடிக்கும்.

மாநில கட்சிகளில் யாருக்கும் ஒருமித்தகருத்து இல்லாத நிலையில், மூன்றாவது அணி என்பது கானல் நீராகத்தான் இருக்கும். ஆகையால், மூன்றாவது அணி என்றபேச்சுக்கே இடமில்லை. பா.ஜ.க., யாரையும், ஒதுக்காது. முஸ்லீம்கள் ஆதரவுடன்தான், குஜராத்தில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. அனைவரும் இந்தியர்கள் என்பதே, பா.ஜ.க.,வின் நிலைப்பாடு.

உ.பி.,யில் கலவரத்தை தடுக்க ஆளும் சமாஜ்வாடிகட்சி தவறிவிட்டது. அந்த அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும். ஆர்எஸ்எஸ்., அமைப்பு அரசியல் முடிவுகளில் தலையிடாது. நாட்டின் வளர்ச்சிதொடர்பாக, ஆண்டுக்கொரு முறை, ஆர்எஸ்எஸ்.,ஸூடன் ஆலோசனை நடத்துவது, பா.ஜ.க.,வின் வழக்கம். லோக்சபாதேர்தலுக்கு முன்னும், பின்னும் அரசியல் மாற்றங்கள் நிகழலாம். கூட்டணிகுறித்து தேர்தல்நேரத்தில் முடிவுசெய்யப்படும்.என்று வெங்கைய்யா நாயுடு கூறினார்.

Leave a Reply