லோக்சபாதேர்தல் மூலம் நாட்டுக்கான நல்லதலைவரை நாங்கள் அளிப்போம் என பா.ஜ.க,. மூத்த தலைவர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அருண்ஜேட்லி, நாட்டில் நல்லதலைமை இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நல்ல தலைமையை நாட்டுக்களிப்போம். லோக்சபாதேர்தல் என்பது நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலைப்போன்றது.

எங்களை பொறுத்தவரையில் எங்களது தலைமை எதுஎன்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம் . விரைவில் அறிவிக்கவும் இருக்கிறோம். ஆனால் பாஜக எழுப்பியிருக்கும் இந்தசவாலுக்கு ஐ.மு.,கூட்டணியிடம் இருந்து பதில் இல்லை. ஏனெனில் அவர்கள் பரம்பரை அரசியலைபற்றி சிந்திப்பவர்கள். லோக்சபாதேர்தல் மூலமாக திறமையுள்ள ஒரு நல்ல தலைவரை பா.ஜ.க இந்நாட்டு மக்களுக்கு தருவோம்.

மக்களின் நம்பிக்கைக்கேற்பவே நாட்டின் தற்போதைய அரசியலும் சென்றுகொண்டிருக்கிறது என்றார் அவர். பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி எந்தநேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதையே அவர் சூசகமாக தெரிவித்துள்ளார் என்பதையே அவரது பேச்சு கட்டுகிறது.

Leave a Reply