மோடியை முன்னிலைப்படுத்துவதில் அத்வானிக்கு கருத்து வேறுபாடு இல்லை  குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை முன்னிலைப்படுத்துவதில் அத்வானி உட்பட யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், பாஜக.,வில் உள்கட்சி பூசல் ஏதும்இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை . பிரதமர்வேட்பாளர் குறித்து கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக கூறிய ராஜ்நாத்சிங், விரைவில் அதற்கான அறிவிப்புவெளியாகும் என்று கூறினார்.

இந்நிலையில், பிரதமர்வேட்பாளராக நரேந்திரமோடியை ஆட்சிமன்றகுழு கூட்டத்திற்கு பிறகு அறிவிக்க பாஜக முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஒப்புதலும் ஆட்சிமன்றக்குழு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply