குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு பிரதமர் பதவிகிடைக்க இந்து முன்னணி முழு ஆதரவு தரும் என்று இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்துமதம் மற்றும் அதன்பெருமைகள் பற்றி இப்போதுள்ள தலைமுறைக்கு தெரியாமல் உள்ளது. இந்துக்களிடம் சமுதாய அக்கறையும் குறைந்துவருகிறது. இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்ததான், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகின்றன.

தமிழகம்முழுவதும் 55,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன . ஈரோடுமாவட்டம் தாளவாடி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள்வைக்க போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இது தவறான அணுகு முறை ஆகும். போதியபாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து விநாயகர் சிலைகள் வைக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் அருகே 80 அடி சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும். மசூதிகளின் சொத்துக்கள் இஸ்லாமியர்களாலும், கிறிஸ்தவ தேவாலயங்களின் சொத்துக்கள் கிறிஸ்தவர்களாலும் பராமரிப்பில் உள்ளது போல, இந்து கோவில்களின் சொத்துக்களும் இந்துக்களின் பராமரிப்பில் இருக்கவேண்டும்.

இந்து கோவில்களுக்கு சொந்தமான 4லட்சம் ஹெக்டேர் சொத்துக்கள் பற்றியவிவரம் இந்து அறநிலையத் துறைக்கு தெரியாமல் உள்ளது. தனியார்வசம் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தசொத்துக்களை மீட்கவேண்டும்.

இந்து கோவில்களில் விஷேச தரிசனத்துக்கான கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமர் ஆக இந்து முன்னணி முழு ஆதரவு தரும் என்றார்.

Leave a Reply