இளந்தாமரை' மாநாடு  தொய்வை உருவாக்க முயற்சி உள்ளூர் அமைப்புகளிடம் பெற்ற தடையில்லாசான்றை சமர்பிக்கவேண்டும்’ என, புது விதிகளை புகுத்தி இளந்தாமரை’ மாநாடு மேடை அமைக்கும் பணியில் தொய்வை உருவாக்கும் முயற்சியில் ஆளும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இம்மாதம், 26ம் தேதி திருச்சி, பொன்மலை, “ஜிகார்னர் ரயில்வே மைதானத்தில், “இளந் தாமரை’ மாநாடு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மோடி பங்கேற்கிறார். இதற்கான பூர்வாங்கபணிகளில் தொண்டர்கள் தீவிரமாக உள்ளனர். ஆயிரக் கணக்கானோர், “ஆன்லைன்’ மூலம் மாநாட்டில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.

மாநாடு நடக்கும் இடத்துக்கு ரயில்வேநிர்வாகம் இதுவரை முறையான அனுமதி வழங்காமல் இழுத்தடித்துவருகிறது. பொன்மலை, “ஜி’ கார்னர் ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்த அனுமதிகோரி, பாஜக.,வினர் திருச்சி கோட்ட ரயில்வேமேலாளர் மஞ்சுளாவிடம் மனு அளித்தனர். பாஜக மூத்த தலைவர் வெங்கைய்யா நாயுடு, இருநாட்களுக்கு முன் மாநாடு நடக்கஉள்ள இடத்தை பார்வையிட்டார். “செங்கோட்டை’ வடிவில் மேடையமைக்க மாநாட்டுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வேநிர்வாகம், இதுவரை அனுமதி வழங்கமல் இழுத்தடிக்கிறது

இது குறித்து பாஜக வட்டாரம் தெரிவிப்பதாவது : போலீஸ், மாநகராட்சி, கலெக்டர் என, உள்ளூர் அமைப்புகளிடம் தடையில்லாசான்று பெற்று, அதற்கான அனுமதிவாங்கி, அதை சமர்பித்தால்தான் அனுமதி வழங்கப்படும், என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதியவிதிமுறை இதுவரை இல்லை. போலீஸ், மாநகராட்சியிடம் அனுமதி வாங்கிவிட்டோம். கலெக்டரிடம் அனுமதிகோரி மனு அளிக்கிறோம். இவற்றை முறையாக சமர்பித்து அனுமதிபெறப்படும். திட்டமிட்டபடி மாநாடு இங்குதான் நடக்கும். மாநாட்டு பணி நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply