சாதாரண தொண்டரான எனக்கு மிகப்பெரியபொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி, நன்றிதெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என்னை பிரதமர்வேட்பாளராக தேர்ந்தெடுத்த பா.ஜ.க, தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பா.ஜ.க ., கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

சாதாரண தொண்டரான எனக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடினமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. வரும் 2014ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க., வெற்றிபெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்களிடமும், தொண்டர்களிடமும் புதியநம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடப்போகிறேன். மத்தியில் உள்ள ஐ.மு., கூட்டணி அரசை அகற்ற கன்னிய குமரியிலிருந்து காஷ்மீர் வரை பிரசாரத்தை துவங்குவோம். ஊழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், சிறந்தநிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். பா.ஜ.க.,வின் வெற்றிக்காக எந்த ஒருமுயற்சியையும் நான் கைவிடப் போவதில்லை என்று கூறினார்.

Leave a Reply