பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பா.ஜ.க.,வினர் பட்டாசுகள்வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் திரண்ட பா.ஜ.க தொண்டர்கள் பட்டாசுகள்வெடித்து கொண்டாடினர்.

இதைத்தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சிறந்தநிர்வாகத்தின் மூலம், குஜராத் மாநிலத்தை, நாட்டின் முதல்நிலைக்கு முன்னேற்றியவர் மோடி. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள, மோடியின் நிர்வாகத்திறன், நாட்டுக்கு இப்போது தேவை. அவரை பிரதமராக ஏற்க, நாட்டுமக்கள் தயாராகிவிட்டனர். மக்களின் மன நிலையை அறிந்துதான், பிரதமர் வேட்பாளராக மோடியை, பா.ஜ.க., அறிவித்துள்ளது.

இதன்மூலம், நாட்டில் உள்ள பா.ஜ.க, தொண்டர்கள் உத்வேகம்பெற்றுள்ளனர். தேர்தல் பணியை பெரும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்

Leave a Reply