நடிகர் ரஜினி காந்த்தை லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க பா.ஜ.க., திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 26ம் தேதி மோடி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட திருச்சிவந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பா.ஜ.க.,விற்கு ஆதரவு அளிக்கும் அரசியல்முடிவை ரஜினி எடுக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் திருச்சியில் மாநாடு நடத்தியதன் மூலம் தி.மு.க.,வும், அதிமுக.,வும் அடுத்தடுத்து ஆட்சி அமைத்துள்ளதாகவும், தற்போது அந்தவாய்ப்பு பா.ஜ.,விற்கு கிடைத்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply