பாஜக., வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடிக்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவர் எதியூரப்பா. மேலும் மீண்டும் பாஜக.,வில் மீண்டும் இணைவதுதொடர்பாக ஆலோசிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நரேந்திரமோடியை அதிகாரப்பூர்வமாக பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததும் எதியூரப்பா அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நரேந்திரமோடி மீது நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். அவர் பிரதமராக ஒத்துழைப்புகொடுப்போம். வாஜ்பாய் போல மோடியையும் நாட்டுமக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாஜக.வுடன் கர்நாடக ஜனதா கட்சியை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். வரும் 18-ந்தேதி மூத்த தலைவர்கள் ஒன்றுகூடி இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply