திருப்பதி அருகே, இஸ்லாமிய பல்கலைக் கழகம் கட்டப்படுவதற்கு, பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் தொடர்பானவிபரங்களை, உடனே தெரியப்படுத்தவேண்டும் என்று , பா.ஜ.க., தலைவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். திருப்பதியில் உள்ள பாதாலு மண்டபத்திற்கு மிக அருகில், இஸ்லாமியபல்கலை கட்டப்படுகிறது. “ஹீராபிசினஸ் குரூப்’ சார்பில்,

அதன் தலைவி நவேராஷேக் ஹீரா, பள்ளி ஒன்றை நடத்திவருகிறார். அங்கு, படிப்பவர்கள் அனைவரும், வெளியூர்மாணவர்கள். தற்போது, நவேரா, இஸ்லாமிய பல்கலை கட்டும்பணியை துவக்கி உள்ளார். இதற்கு பா.ஜ.க., மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்துள்ளன. இதுகுறித்து, திருப்பதி பா.ஜ.க,ஒருங்கிணைப்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி கூறியதாவது: திருப்பதிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக , உளவுதுறை மற்றும் பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், திருப்பதியில், இஸ்லாமிய பல்கலைக்கு அனுமதி தந்துள்ளது , சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு தீவிரமாக விசாரிக்கவேண்டும். பல்கலைக்கழகம் கட்டும் நிலம் யாருடையது, யார்கொடுத்தது, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், மாணவர்களின் பாடதிட்டம் என்ன? என்ற விவரங்களை உடனடியாக விசாரித்து, தெரியப்படுத்தவேண்டும். என்று அவர் கூறினார்.

Leave a Reply