குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆற்றல், உறுதித்தன்மை, வளர்ச்சிக்கு வழிகாணும் பாங்கு போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்

அவர் மேலும் கூறியது: பிரதமர்பதவி வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டது பா.ஜ.க.,வில் மட்டுமன்றி, பொதுமக்களிடமும் மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.

மோடியை பிரதமர்வேட்பாளராக நிறுத்துவதை கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி எதிர்க்க வில்லை. நான்குமாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப்பிறகு அறிவிக்கலாமே என்று தான் அவர் கூறியுள்ளார். பா.ஜ.க ஒரு ஜனநாயக கட்சி. கட்சிதான் மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவித்துள்ளது .

எங்களைப்போல் காங்கிரஸால் பிரதமர்வேட்பாளர் யார் என அறிவிக்க இயலாது. அப்படி அறிவிக்க அவர்களில் யார் இருக்கிறார்கள். பா.ஜ.க ஆளும்மாநிலங்களின் நிர்வாகத் திறமை, வளர்ச்சியை முன்னிறுத்தி மக்களவைத்தேர்தலை சந்திப்போம். தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சிலகட்சிகள் இணையக் கூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply