பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு, ஜெய்ஷ்-இமுகமது தீவிரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளது. ‘இந்தியாவின் எந்தபகுதிக்கு சென்றாலும் குறிவைத்து தாக்குவோம்’ என இன்டர்நெட்டில் ஆடியோவெளியிட்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது . இதையடுத்து, அத்வானிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த மவுலானா மசூத்அசார் என்பவன் ஜெய்ஷ்இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பை நடத்திவருகிறார்.

அந்த அமைப்பு தான் அத்வானிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பான ஆடியோஒன்றை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவுக்குள் எங்கள் அமைப்பினர் ஊடுருவமுடியாத இடம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்’ என அத்வானியிடம் மசூத் அசார் கேள்வி கேட்டுள்ளான் . மேலும், அத்வானி இந்தியாவின் எந்தபகுதிக்கு சென்றாலும் கொலைசெய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளான்.

Leave a Reply