ஒரேநேரத்தில் பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் நரேந்திர மோடி என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி அவரை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ரூ. 3,671 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் புதிய மின்நிலைய திறப்பு விழாவில்பேசிய அத்வானி, கிராமப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கவேண்டும் என்பது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை போலவே சட்டீஸ்கர் முதல்வர் ரமன்சிங்கின் கனவாகும்.

ஒரே நேரத்தில் பலகிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியவர் மோடி. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் சட்டீஸ்கர் மாநிலத்தை உருவாக்கும்பொறுப்பை என்னிடம் வழங்கினார். ஓட்டுவங்கி அரசியலுக்காக நாங்கள் இந்த மாநிலத்தை உருவாக்கவில்லை. மக்கள்நலனுக்காக உருவாக்கினோம். பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிதான் முதன்முதலில் கிராம பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்குவதில் தீவிரம்காட்டியவர். அடிப்படை கட்டமைப்பு, மின்சாரத் துறையில் குஜராத் பெருமளவு முன்னேறியுள்ளது என்று மோடியை புகழ்ந்து பேசினார்.

Leave a Reply