நரேந்திர மோடியின் திருச்சி வருகையினால் தமிழகத்தில் பா.ஜ.க இடம்பெறும் கூட்டணி உருவாகும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வரும் 2014-ம் ஆண்டு மக்களவைதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க சார்பில் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இது நாடுமுழுவதும் பா.ஜ.க.,வினரிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; மோடியின் கூட்டத்தில்பங்கேற்க மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. பிரதமர்வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட பிறகு மோடிபங்கேற்கும் முதல்மாநாடு என்பதால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு ஊடகங்கள் எடுத்த கருத்துக்கணிப்பில் சுமார் 52 சதவீத தமிழர்கள் மோடி பிரதமராக வேண்டும் என கருத்துதெரிவித்துள்ளனர். எனவே, திருச்சிமாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை உருவாக்கும் . மோடி வருகைக்கு பிறகு தமிழகத்தில் பா.ஜ.க இடம்பெறும் வலுவான கூட்டணி அமையும் சூழல் உருவாகும் என்றார்.

Leave a Reply