நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி  நாடுமுழுவதும் பாஜக அலை வீசுவதால் மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்படுவது உறுதி என பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற ஈரோடு தெற்குமாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:

எந்த ஒருகட்சிக்கும் சித்தாந்தம் அவசியம். சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் பா.ஜ.க இயங்குகிறது. ஆட்சி அமைக்க சிந்தாந்தம், சாதனை ஆகியஇரண்டும் அவசியம்.உலகிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என அமெரிக்க பத்திரிகை எழுதியுள்ளது. அதே நேரத்தில் வளர்ச்சிக்கு உத்வேகமாக இருப்பவர் நரேந்திரமோடி என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதும், குஜராத்தில் அதன்தாக்கம் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் உணவு உற்பத்தி இருமடங்கு உயர்ந்துள்ளது.பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் பாஜக கூட்டணிகட்சி ஆளும் பஞ்சாப் மாநிலங்களில் மின் மிகு மாநிலமாக இருந்துவருகிறது.

.விலைவாசி உயர்வு, ஊழல், செயல்படா தன்மை ஆகியவற்றால் காங்கிரஸ் அரசு மீது மக்கள் வெறுப்படைந்து விட்டனர். வளர்ச்சிக்கு இலக்கணமாக இருக்கும் நரேந்திரமோடியிடம் ஆட்சியை ஒப்படைத்தால், நல்ல ஆட்சி அமையும் என்று மக்கள் நம்புகின்றனர். நாடுமுழுவதும் பாஜக அலைவீசுகிறது. எனவே, மத்தியில் விரைவில் ஆட்சிமாற்றம் உறுதி. பாஜக தொண்டர்கள் சிலமாதங்கள் கடினமாக உழைக்கவேண்டும் என்றார்.

Leave a Reply