திருச்சியில் நடந்த பாஜக., வின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசியசெயலாளர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில்:–

பாஜக ஏழைகளுக்காக பாடுபடும் கட்சி என்பதில் உறுதியாக இருக்கிறது . வருகிற பாராளுமன்றதேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். தேமுதிக., மதிமுக. பிஜேபி.யுடன் கூட்டணி அமைக்க தமிழருவி மணியன் முயற்சிசெய்து வருகிறார். விரைவில் நல்லபடி கூட்டணி அமையும்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபின் இலங்கையில் சமஉரிமையுடன் தமிழர்கள் வாழவும் , தமிழகமீனவர்கள் பிரச்சினைகளை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசபக்தி உள்ளவர்கள் அனைவரும் மோடிபிரதமராக வரவேண்டும் எனறு கூறுகிறார்கள். சில தீய சக்திகள்மட்டும் அவரை எதிர்க்கின்றன.

நடிகர் ரஜினி காந்திடம் நாங்கள் இன்று வரை எதுவும் பேசவில்லை. உரியநேரத்தில் அவர் நல்ல முடிவை அவர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 272க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சியை பாஜக பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply