டெல்லி, மபி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி, இன்னும் இரண்டுவாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

.
நவம்பர் மாதத்தில் தேர்தல்நடத்தப்பட்டு டிசம்பர் முதல்வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையவட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் சட்டமன்றத்தேர்தல் நடைபெறுவதாக உள்ளது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து 29ம் தேதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், உள்துறை அமைச்சர் அதிகாரிகளை கலந்துபேசி இருக்கிறார்கள். நக்சலைட் ஆதிக்கமிக்க சட்டீஸ்கரில் அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுகுறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாநிலங்களில் ஒவ்வொருகட்டமாக நவம்பர் மாதம்முழுவதும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி, ராஜஸ்தான், மபி, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நவம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்திலும் சட்டீஸ்கரில் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடக்கலாம் என தெரிகிறது.

Leave a Reply