முசாபர்நகர் கலவர பின்னணியில் உபி. அரசுக்கும், ஆளும்கட்சிக்கும் தொடர்பு இருக்கும் திடுக்கிடும்தகவல் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக தனியார் தொலைக் காட்சி ஒன்று ரகசியமாக பதிவுசெய்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலவரத்தை ஒடுக்க உடனடிநடவடிக்கை எடுக்காமல் தாமதமாக செயல்படுமாறு அரசும், ஆளும்கட்சி தலைவர்களும் தங்களுக்கு உத்தரவிட்டு இருந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தவிவரம் வீடியோவில் பதிவாகி பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கலவரத்திற்கு சமாஜ்வாதி கட்சிதான் மூலக்காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், மாநில அரசை டிஸ்மிஸ்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உ.பி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அமைச்சர் அஜீத்சிங்கும் கூறியுள்ளார்.

கலவரத்தை மத்திய அரசு கண்டும்காணாமல் வேடிக்கை பார்த்து கொண்டியிருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அகிலேஷ் அரசை டிஸ்மிஸ்செய்ய வேறு காரணங்கள் தேவையில்லை என பகுஜன்சமாஜ் கட்சியும் கூறியுள்ளது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக செயல்படவேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

Leave a Reply