ஜம்மு காஷ்மீரில் வெளியிடப்பட்ட தூக்கிலிடப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல்குற்றவாளி அஃப்சல் குருவின் சிறைக்குறிப்புகள் புத்தகத்தில் தலிபான்களை புகழ்ந்தும் ,தீவிரவாதத்தை ஆதரித்தும் எழுதப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரைச்சேர்ந்த அஃப்சல்குரு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்டார். சிறையிலிருந்த காலத்தில் அஃப்சல்குரு எழுதிய டைரிக் குறிப்புகளை 94 பக்கமாக வெளியிடப்பட்டுள்ளது . மொத்தம் 5 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு இவை தனிச்சுற்றாக மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள்: – 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில்ஈடுபட்டு உயிரிழந்த ஜெய்ஷ்இ முகமது கமாண்டர் காசி பாபா, ஒருமாவீரர்! – ஆப்கானிஸ்தானின் தலிபான்தலைவர் முல்லாமுகமது உமர் நம்பிக்கைக்குரிய தலைவர் – ஜம்முகாஷ்மீர் விடுதலைக்காக இரண்டு வழிகள் தான்.. ஒன்று ஜிஹாத் எனப்படும் புனிதப்போரில் ஈடுபடுவது அல்லது இடம்பெயருவது.. இங்கே இடம்பெயர் மதினா எதுவும் இல்லை.. அதனால் புனிதப்போர்தான் வழி.. ஒவ்வொரு முஸ்லிமும் புனிதப்போரில் ஈடுபடவேண்டும். – இஸ்லாம் போராட கற்று கொடுத்திருக்கிறது. விலங்குகள்கூட தங்களது தேவைகளுக்காகப் போராடுகிறது..நாமும் போராடவேண்டும். இப்ப்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால் இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜக.,வின் இளைஞர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ரவீந்தர்ரெய்னா கூறுகையில், இந்தபுத்தகம் இந்தியாவுக்கு எதிரான சதியின் ஒருஅங்கம். இந்த புத்தகத்தை தடைசெய்ய வேண்டும். ஜம்மு காஷ்மீரை சுடுகாடாக்க நினைப்போரின் சதி நிறைவேற அனுமதிக்க கூடாது என்றார்.

Leave a Reply