பாஜக.,வில் மீண்டும் இணையுமாறு கர்நாடகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து விவாதிக்க கர்நாடக ஜனதாவின் உயர்மட்டக்குழு இன்று மாலை பெங்களூருவில் கூடுகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா

பாஜக.,விலிருந்து விலகி கர்நாடக ஜனதா கட்சி என்று புதியகட்சியை தொடங்கினார். அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுகளில்மட்டுமே அவரால் வெற்றி பெறமுடிந்தது.

இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள எடியூரப்பாவை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக.,வில் மீண்டும் இணையுமாறு அவருக்கு ராஜ்நாத்சிங் அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள்

அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து முடிவு எடுக்க கட்சியின் உயர்மட்டகூட்டத்தை பெங்களூருவில் எடியூரப்பா கூட்டியுள்ளார். மேலும் பாஜக.,வில் இணைவது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை எடியூரப்பாவிற்கு இக்கூட்டத்தில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply