உபி மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 50 பேர்வரை கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வன்முறைக்கு பாஜக தான் காரணம் என உண்மையில் வன்முறைக்கு காரணமான ஆளும் சமாஜ்வாடி கட்சி வீண் குற்றம் சுமத்தி அவர்களை கைதுசெய்யவும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி அரசு தயாராகிவருகிறது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியதாவது:-

அரசின் இந்த மாதிரியான கைது நடவடிக்கைகளை எங்கள் எம்எல்ஏ.-க்கள் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் கைதுக்குபிறகு என்ன நடக்குமோ அதற்கு அரசே பொறுப்பாகவேண்டும் என்று நான் எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஏதேனும் எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்படுவார்களேயானால், அது சமாஜ்வாடிகட்சி மீண்டும் வன்முறையை தொடங்கவிரும்புகிறது என்றே எடுத்துக்கொள்ளப்படும். இந்தமுறை அவர்கள் ஒரு சமுதாயத்தை, ஒருகட்சியை குறிவைக்கவே விரும்புகிறார்கள்.
என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply