பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்போம் பாஜக.,வில் தாம் இணையப் போவதில்லை.. ஆனால் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்போம் என கர்நாடகா ஜனதா கட்சித்தலைவர் எதியூரப்பா தெரிவித்துள்ளார்.

பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதை கர்நாடகஜனதா கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான எதியூரப்பா வரவேற்றுள்ளார். அத்துடன் தாம்மீண்டும் பா.ஜ.க.,வில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தப்போவதாகவும் கூறியிருந்தார். இந்த ஆலோசனை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தின்முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, பாஜக.,வில் இணைவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம். நரேந்திரமோடி நல்ல நிர்வாகி. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். பாரதிய ஜனதாவில் இணையா விட்டாலும் அந்த கட்சி தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியை ஆதரிக்கிறோம் என்றார்.

Leave a Reply