சோனியாகாந்தி இந்தியாவின் பிரதமரா ஏற்றுக்கொள்ள முடியாது சுதந்திரம்பெற்று 60 வருடங்களுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரியபதவிக்கு ஒரு வெளிநாட்டவரை உட்காரவைப்பது 100கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றே ஆகிவிடும் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி, ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திரா காந்தியின் மருமகளாகவும் வந்ததால், அவர் நமது அன்பையும் நேசத்தையும்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரைமரியாதையுடன் பார்க்கிறோம். ஆனால், இந்தியாவின் பிரதமராகவர விரும்பினால், அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

நமது புண்ணியபூமி 150 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டவரின் பிடியின்கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து சுதந்திரம்பெற நம் முன்னோர் எண்ணற்றோர் உயிர்தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து சுதந்திரம்பெற்று 60 வருடங்களுக்கு பிறகும், மீண்டும் நாட்டின் உயரியபதவிக்கு ஒரு வெளிநாட்டவரை உட்காரவைப்பது 100 கோடி மக்களும் திறானியற்றவர்கள் என்றாகிவிடும். இது மக்களின் உணர்வுகளை பெரிதளவில்பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply