பாஜக.வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு இசட்பிரிவு பாதுகாப்பு பாஜக.வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு இசட்பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி தேசிய பாதுகாப்புபடை கமாண்டோக்களின் பாதுகாப்பு அவருக்கு வழங்கபடுகிறது.

பாஜக.,வின் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு வரவேற்பு அதிகரித்துவரும் அதே வேளையில், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.

பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளதால் நரேந்திரமோடிக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என உள்துறை பாதுகாப்பு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைசெய்தது. இந்த பரிந்துரையை பரிசீலனைசெய்த மத்திய உள்துறை அமைச்சகம் இதனை ஏற்றுக் கொண்டு நரேந்திரமோடிக்கு தேசியபாதுகாப்பு படை கமாண்டோ வீரர்கள்மூலம் பாதுகாப்புவழங்க அனுமதி அளித்துள்ளது.

18 கமாண்டோவீரர்கள் மோடிக்கு பாதுகாப்புவழங்குவார்கள். இதன்காரணமாக நரேந்திர மோடிக்கு இப்போது வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு இரண்டுமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளது.

Leave a Reply