இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட முசாபர் நகருக்கு செல்ல இருந்த பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கின் பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. உ.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி இருபிரிவினரிடையே ஏற்பட்டமோதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். 40 ஆயிரம்பேர் அகதிகளாயினர். இதனால் உ.பி.,யில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் பகுதியை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் இன்று பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜ்நாத் சிங்கின் முசாபர் நகர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முசாபர் நகர் பகுதிகளுக்கு ஏற்கனவே செல்லமுயன்ற பா.ஜ.க தலைவர்கள் தடுத்துநிறுத்தப்பட்ட நிலையில் ராஜ்நாத் சிங்கும் தடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply