பாஜக.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்கும், திருச்சியில் இம்மாதம், 26ம் தேதி நடக்கும், பா.ஜ.,வின் இளந் தாமரை மாநாடு மற்றும் லோக்சபாதேர்தல் பிரசார சி.டி., சென்னையில் நேற்றுவெளியிடப்பட்டது.

கட்சியின் தேசிய செயலர் இல.கணேசன் வெளியிட, திரைப்பட நடிகை நந்தனா பெற்றுக்கொண்டார். நடிகர்கள் விஷ்ணுசரண், சத்யா மற்றும் பா.ஜ., வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் .சேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சி.டி.,யை வெளியிட்டு இல.கணேசன் கூறியதாவது: தமிழகமீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க, கச்சத்தீவை மீட்கவேண்டும். மத்தியில் பா.ஜ.க , ஆட்சி அமைந்தால், கச்சத்தீவு மீட்கப்படும். இலங்கையில், வடக்கு மாகாணதேர்தல் நடக்க உள்ளது.தேர்தல் நடக்கும் தமிழர்பகுதிகளில், இலங்கை அரசு ராணுவத்தை குவித்துள்ளது. இதனால், மக்கள் அச்சமின்றி ஓட்டுபோட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில், சுதந்திரமானதேர்தல் நடக்க, மத்திய அரசு தலையிட வேண்டும்.லோக்சபாதேர்தலில், சிறுபான்மை ஓட்டுகளை கைப்பற்றுவதற்காக, பாஜக., மீது பொய்யான குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் முன்வைக்கிறது. இந்த பொய்பிரசாரத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று இல.கணேசன் கூறினார்.

Leave a Reply